இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2021-2022” இல், கைத்தொழில், வணிகம், திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் சமூகம் ஆகிய முக்கிய துறைகளின் கீழ் 90 பேருக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகள் வழங்கப்பட்டன.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் .எஸ். பத்திரகே, பணிப்பாளர் நாயகம் பி.பி ஹேமந்த ஜயசிங்க, புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் ஆர். சஞ்சீபன், பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்