பரீட்சை கடமைகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவுகள் கிடைக்கவில்லை
கொடுப்பனவுகள் யாவையும் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
(நதீர் சரீப்தீன்)
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று பல மாதங்களைக் கடந்துள்ளபோதும் இப்பரீட்சை கடமைகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவுகள் இது வரையில் வழங்கப்படவில்லை என பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோல் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டோருக்கான கொடுப்பனவுகளும் இது வரையில் வழங்கப்படவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.
இதேவேளை 2022ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்த நிலையில் அப்பரீட்சையை 29 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளது
தற்போதுள்ள உயர் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு அசெளரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றதொரு சூழ்நிலையில். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து போயுள்ளது
எனவே பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் யாவையும் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட பிரிவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.