உலக அளவில் சர்வதேச ஊடக சுதந்திர தினம் இன்று (03) அனுஷ்டிக்கப்படுகிறது.
1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி தமது ஊடக நிறுவனத்திற்கு முன்பாக கொடூரமாக கொலை செய்யப்பட்ட கொலம்பிய ஊடகவியலாளர் Guillermo Cano-ஐ நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை 30 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தினத்தை (03) சர்வதேச ஊடக சுதந்திர தினமாக அனுஷ்டிப்பதற்கு பரிந்துரைத்தது.
”உரிமைகளுக்கான எதிர்காலத்தை வடிவமைத்தல், ஏனைய அனைத்து வகையான மனித உரிமைகளுக்கும் ஒரு இயக்கியாக கருத்து சுதந்திரம் காணப்படல் வேண்டும்” என்பதே இம்முறை ஊடக சுதந்திர தினத்திற்கான தொனிப்பொருளாக காணப்படுகிறது.