ஹிங்குராக்கொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது
ஹிங்குராகொட விமான நிலையத்தை சர்வதேச சிவில் விமான நிலையமாக மாற்றுவதன் மூலம் பொலன்னறுவை, அநுராதபுரம், சீகிரியா மற்றும் தம்புள்ளை ஆகிய இடங்களுக்கான விஜயங்களை இலகுவாக்க முடியும் என்றும் அமைச்சர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்
கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (03) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளார்
விமான நிலையத்தின் தற்போதைய 2,287 மீற்றர் ஓடுபாதையை 2,800 மீற்றர் வரை நீட்டித்து, விமான நிலைய ஓடுபாதைக்கான அணுகல் பாதையை அமைப்பதற்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் பயணிகள் முனையம் ஆகியவற்றையும் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.