crossorigin="anonymous">
உள்நாடுபொது

3 வகை டெங்கு வைரஸ் பரவி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது

கடந்த 12 வருடங்களாக நாட்டில் காணப்படாத ஒரு வகையான வைரஸ்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் டெங்கு ஆய்வு நிறுவகம் மேற்கொண்ட 90 பரிசோதனைகளில் டெங்கு 03 வகை வைரஸ் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி பரவி வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

டெங்கு 03 வகை வைரஸ் நாட்டில் கடந்த 12 வருடங்களாக நாட்டில் காணப்படாத ஒரு வகையான வைரஸ் என்றும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

எமது உடலில் இந்த நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்திகள் இல்லை என்றும், இதன் காரணமாக இந்நோய் பரவும் அபாயம் காணப்படுவதாகவும் வைத்தியர் ருவன் விஜயமுனி வலியுறுத்தியுள்ளார்.

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர், இரண்டாம் நாள் முழு இரத்தப் பரிசோதனையொன்றை (Full Blood Count) மேற்கொள்ள வேண்டும். அத்துடன், 12 மணித்தியாலத்திற்கு ஒருமுறை முழு இரத்தப் பரிசோதனை செய்து நோயாளியைக் கண்காணிப்பது அவசியம் என்றும் கூறினார்.

முழு இரத்தப் பரிசோதனையில் எண்ணிக்கையின் பெறுமதி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறைந்திருந்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 1 =

Back to top button
error: