வெளிநாடு
சூடானில் சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி தவிப்பு
ராணுவத்திற்கும் - துணை ராணுவத்திற்கும் இடையே மோதல்
சூடானில் கடும் உள்நாட்டு சண்டைக்கு மத்தியில் குழந்தைகள் சிக்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து ஐ. நா. சபை தரப்பில்,
“ வியாழனன்று சூடானில் போர் நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் கடுமையான சண்டை நீடித்தது. பேச்சுவார்த்தைகளுக்கு இடையே சண்டைகள் தொடர்கின்றன. கடும் சண்டையில் குழந்தைகள் சிக்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தலைநகர் கார்ட்டூமில் உள்ள நிலப்பரப்பை கட்டுப்படுத்துவதில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான மோதல் தொடர்கிறது.