நிலவும் கடும் மழை காரணமாக நாடு முழுவதும் உள்ள பல முக்கிய ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தனகலு ஓயா, களனி, நில்வளவை, களு மற்றும் ஜின் கங்கைகளின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பிரதான நீர்ப்பாசன நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 67 வீதத்தில் நிரம்பியுள்ளன.