வெளிநாடு
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இன்று (09) கைது செய்யப்பட்டார்.
இஸ்லமாபாத் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கருப்பு நிற ஜீப்பில் பாகிஸ்தான் அதிரடிப் படை போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இம்ரான் கான் மீது பாகிஸ்தானில் 100-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இதில் ‘காதிர் ட்ரஸ்ட்’ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் காவல்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இம்ரான் கானின் கைதை எதிர்த்து அவரது கட்சியான தெஹ்ரீக்-இ- இன்சாப் நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளது.