அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது