கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி
காங்கிரஸ் கட்சி - 136, பாஜக - 64, மஜத - 20, மற்றவை- 4 இடங்களில் முன்னிலையில்
இந்தியா – கர்நாடக சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மாலை 5.30 மணி நேர நிலவரப்படி, ஆட்சி அமைக்க தேவைப்படும் 113 இடங்களைக் கடந்து 122 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் (13) தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி – 136, பாஜக – 64, மஜத – 20, மற்றவை- 4 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகின்றன.
இதில் ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 117 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.
அங்கு ஆளும் பாரதிய ஜனதா கட்சி பின்தங்கியுள்ளது. அதிகாரபூர்வ வெற்றி நிலவரம் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வெற்றி முகத்தைத் தொடர்ந்து, பெங்களூரு மற்றும் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மணிப்பூரில் தேர்தல் முடிவுகள் வெளியானதும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பாரதிய ஜனதாவுக்கு தாவிய அண்மைக்கால வரலாற்றை கருத்தில் கொண்டு, வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பெங்களூருவுக்கு விரைந்து வர வேண்டும் என்று அக்கட்சி உத்தரவிட்டுள்ளது.