ஐக்கிய நாடுகள் சபையினால் ‘சர்வதேச தேயிலை தினம்’ ஆண்டு தோறும் மே 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்தியாவின் அஸாம் மாநில தேயிலைத் தோட்டத்தில் சீன தொழிலாளர்கள் 1838 டிசம்பரில் முன்னெடுத்த சம்பளப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வதேச தேயிலை தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, பங்காளதேஷ், கென்யா, மலாவி, மலேசியா, உகண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005 ஆம் ஆண்டு முதல் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.