இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த வருடம் ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் எதிர்ப்பு தெரிவித்ததால், அவருடனான முரண்பாடுகள் மேலும் தீவிரமடைந்தன.
அரசாங்கம் முன்வைத்த கட்டண அதிகரிப்பு சதவீதத்தை விட குறைந்த சதவீதத்தில், பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியுமென ஜனக்க ரத்நாயக்க இரு சந்தர்ப்பங்களிலும் வலியுறுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் 2021 மார்ச் 14 ஆம் திகதி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக ஜனக்க ரத்நாயக்க நியமிக்கப்பட்டார்.