crossorigin="anonymous">
வெளிநாடு

வானில் பறக்கும்போது விமானத்தின் கதவை திறந்த பயணி

பயணிகள் நிலைதடுமாறி சிலர் மயக்கமடைந்து விழுந்து .சிலருக்கு மூச்சுத் திணறல்

விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, அவசர கால கதவை அவ்விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் திடீரென்று திறந்த சம்பவமொன்று தென் கொரியாவில் நேற்று (26) இடம்பெற்றுள்ளது

தென் கொரியாவை சேர்ந்த ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் தென்கொரியாவில் உள்ள ஜெஜூ தீவிலிருந்து டேகு நகருக்கு 194 பயணிகளுடன் புறப்பட்டுச் பறந்து கொண்டிருந்தபோதே அவசர கால கதவை பயணி ஒருவர் திடீரென்று திறந்துள்ளார்

கதவு திறந்த நிலையில் காற்று வேகமாக விமானத்துக்குள் வீச ஆரம்பித்ததுள்ளதுடன் பயணிகள் நிலைதடுமாறி சிலர் மயக்கமடைந்து விழுந்து .சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது

இதையடுத்து உடனடியாக விமானம் டேகு சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது

அவசரகால கதவைத் திறந்த 30 வயது மதிக்கத்தக்க நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 55 − = 53

Back to top button
error: