புகையிரதம் மூன்று மோதி விபத்து: 207 பேர் உயிரிழப்பு: 900க்கும் மேற்பட்டோர் காயம
இந்தியா – கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கோரமண்டல் விரைவு புகையிரதம் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் அருகே நேற்று (02) வெள்ளிக்கிழமை இரவு சரக்கு புகையிரதத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
ஒடிஷாவின் பாலசோர் மாவட்டம் அருகே 3 புகையிரதங்கள் மோதி பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. ஹவுரா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு புகையிரதம் ஒன்றின் மீது மோதியது. அதன் பெட்டிகள் தடம் புரண்டு அருகேயுள்ள தண்டவாளத்தில் விழுந்தன. அவற்றில் மறுபுறம் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர் பாஸ்ட் புகையிரதம் மோதியுள்ளது
விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
காயமடைந்தவர்கள் கோபால்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஒடிசா மாநில தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்
ஒடிசாவில் ரயில் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம், கடுமையான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.