இலங்கை கடவுச்சீட்டுகளுக்கு Online ஊடாக விண்ணப்பிக்கும் செயற்றிட்டம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது
நாடளாவிய ரீதியில் 52 பிரதேச செயலகங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, தேவையான தகவல்களை வழங்கி கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மூன்று நாள் சேவை மற்றும் சாதாரண சேவைக்கமைய, கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சாதாரண சேவைக்கு 5000 ரூபாவும், மூன்று நாள் சேவைக்கு 15,000 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.