இலங்கைக்கான வியட்நாம் சோசலிசக் குடியரசின் தூதுவர் திருமதி ஹோ தீ தான் ட்ருக் ( Ho Thi Thanh Truc) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு 16) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நீண்டகால பரஸ்பர இருதரப்பு உறவுகள் குறித்து இரு தரப்பினரும் தகவல்களை பரிமாறிக் கொண்டதோடு, வியட்நாமின் படிப்படியான எழுச்சியும் அபிவிருத்தியும் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கையை கட்டியெழுப்புவதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.