கொழும்பு ‘நாடாமி’ தொழிலாளர்களும் அவர்களது வாழ்வாதாரமும்
(நதீக தயா பண்டார)
கொழும்பு மொத்த வியாபாரத்தில் மனித உழைப்பின் முக்கிய கட்டமாக தொழிலாளர் வளமாக ‘நாடாமி’ தொழிலாளர்கள் அறியப்படலாம்.
கொழும்பு கோட்டை மற்றும் புரக்கோட்டை மொத்த வியாபாரத்தில் தினசரி கூலி வேலை செய்யும் நாடாமி தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் ஆயிரத்து ஐநூறு
தினசரி கூலி வேலை செய்யும் நாடாமி தொழிலாளர்கள் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஊதியமாக கிடைக்கும் சொற்ப பணத்தில் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை நடத்த முடியாமல் தவிப்பதாக அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் தினசரி ஊதியமான வருமானம் அதிகரிக்காததால் அன்றாட வாழ்க்கை நெருக்கடியாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பு – மட்டக்குளி, மோதரை, புளுமண்டல், பொரளை, தெமட்டகொட, ஒருகுடவத்தை, கொலன்னாவ, கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறுபவர்களான இவர்கள் கூலி வேலை அடிப்படையில் விடியற்காலை முதல் நள்ளிரவு வரை பொருட்களை ஏற்றி இறக்கி போக்குவரத்து போன்ற வேளைகளில் ஈடுபட்டுவருகின்றனர்
இவர்கள் தொடர்பான (சிங்கள மொழி) காணொளி தொகுப்பை கீழே காணலாம்.