வெளிநாடு
அமெரிக்கா – அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
நிலநடுக்கத்தின் தாக்கம் 7.4 ரிக்டராகப் பதிவு: சுனாமி எச்சரிக்கை
அமெரிக்கா – அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு அடியில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.4 ரிக்டராகப் பதிவானது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அலாஸ்கா தீபகற்பத்தின் கடல் பகுதிகளில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.48 மணியளவில், சாண்ட் பாயின்ட் என்ற நகரத்தின் தென்மேற்கு திசையில் 89 கிமீ தொலைவில் 21 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பால்மரில் உள்ள தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெற்கு அலாஸ்கா மற்றும் அலாஸ்கா தீபகற்பத்திற்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.