crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 21 ஆம் திகதி இந்தியா விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக இந்திய வௌியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கு மேற்கொள்கின்ற முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: