இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இநந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் இன்றையதினம் நடைபெற்றதுடன், விவாதம் முடிவடைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ விஜித ஹேரத் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரினார்.
இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதற்கமைய இரண்டாவது மதிப்பீடு 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்துக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.