இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (21) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியதுடன், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.