crossorigin="anonymous">
உள்நாடுபொது

பொலிஸாருக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு 11,450 முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிராக 1960 தொலைபேசி எண் ஊடாக 24 மணிநேரமும் முறைப்பாடு செய்யலாம்

2023 ஆம் ஆண்டு பொலிஸாருக்கு எதிராக 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. பாரபட்சமாக செயற்படுவதாக பொலிஸாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விசாரணைகளுக்கு சமூகமளிக்காமை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.

கிடைத்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாரபட்ச செயற்பாடுகளுடன் தொடர்புடையவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 9, 774 முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட 1960 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.

ஏனைய முறைப்பாடுகள் பொது முறைப்பாட்டு புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன. இதுவரை 1800-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

1960 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் பொலிஸாரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − = 61

Back to top button
error: