இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை போதியளவு மழைவீழ்ச்சி பதிவாகாது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வறட்சி காரணமாக நீரேந்துப் பகுதிகளின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைந்து வருகின்றது.
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 33.3 வீதம் வரை குறைடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் சுதர்ஷனீ விதானபதிரண தெரிவித்துள்ளார்.
மகாவலி ஆற்றின் கொள்ளளவு 34 வீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக மகாவலி அதிகாரசபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்துள்ளதாகவும் மின்சாரத்திற்கான கேள்வி மணித்தியாலத்திற்கு 48 கிகாவாட்(GW) வரை அதிகரித்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது