crossorigin="anonymous">
உள்நாடுபொது

அஸ்வெசும தொடங்க முன் வறுமைக்கோட்டைத் தீர்மானித்திருக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

அஸ்வெசும அல்லது எந்தவொரு திட்டத்தையும் தொடங்குவதற்கு முன் குடும்ப அலகின் வருமானச் செலவுக் கணக்கெடுப்பை மேற்கொண்டு வறுமைக் கோட்டைத் துல்லியாக தீர்மானித்திருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

உண்மையான ஏழைகள் யார் என்று கண்டுபிடிருக்க முடியும் என்றாலும், தற்போதைய அரசாங்கம் முதலில் திட்டத்தை ஆரம்பித்து பின்னர் கணக்கீடு நடத்த தொடங்கியுள்ளதாகவும், அது தவறு என்றும், வங்குரோத்து நாட்டில் சரியானதைச் சரியான வழியில் செய்யக் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

அநுராதபுரம் லங்காராம விகாரை மற்றும் ஜயந்தி விகாரைக்கு நேற்று (01) விஜயம் செய்து வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பிரதம சங்கநாயக்க விகாரையின் மதிப்பிற்குரிய பண்டிதர் கலாநிதி நுகேதன்னே மங்கள தர்ம கீர்த்தி ஸ்ரீ சோபித ரதனஜோதி பஞ்சானந்தபிதான நாயக்க தேரரை சந்தித்த போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் ஜனசவிய நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்த தேவையுடைய ஏழை மக்களைப் போன்று இன்றும் இருப்பதாக மகாநாயக்க தேரர் இங்கு தெரிவித்ததோடு சிலர் சமுர்த்தி கொடுப்பணவு துண்டிக்கப்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 13

Back to top button
error: