இம்ரான் கானுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, உடனடியாக கைது
நீதிமன்ற தீர்ப்பு ஒருதலைபட்சமானது - இம்ரான் கானின் கட்சி தெக்ரீக்-இ-இன்சாப்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூரில் உள்ள இல்லத்தில் இருந்த இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
அரசுக் கருவூலமான தோஷகானாவிடம் இருந்த பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளி என்று இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி ஹுமாயுன் தில்வார், இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடையும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்
இம்ரான் கான் மீதான வழக்கின் தீர்ப்பு காரணமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருதலைபட்சமானது என இம்ரான் கானின் கட்சியான தெக்ரீக்-இ-இன்சாப் தெரிவித்துள்ளது.