2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.
ஹேவாகம மாதிரி ஆரம்ப பாடசாலையின் மாணவர் தலைவர்களுக்கான உத்தியோகபூர்வ பதக்கங்களை அணிவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
“ஒவ்வொரு பாடத் தொகுதியின் முடிவிலும் மதிப்பீடு நடாத்தப்பட்டு அதன் புள்ளிகள் கணினியில் பதிவு செய்யப்பட்டு வருட இறுதிப் பரீட்சையின் புள்ளிகளுடன் இணைக்கப்படும்.
வருங்காலத்தில், ஒரு தவணைக்கு ஒரு செயல்நூல் என, மூன்று தவணைகளுக்கான செயல்நூல்கள், மூன்று பகுதிகளாக மாணவர்களுக்கு வழங்கப்படும் இம்முறையினால் மாணவர்களின் புத்தகப்பை சுமையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும்” அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்