நாடு முழுவதும் அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் (Insulin) மருந்திற்கு தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நீரிழிவு நோயாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது
மிகக் குறைந்தளவானவர்களுக்கு மாத்திரமே இன்சுலின் மருந்தை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளக்கூடிய இயலுமை காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நீரிழிவு நோய் அதிகரித்து, நோயாளர்களின் நோய் நிலைமை அதிகரித்துள்ளதாக வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்