வெளிநாடு
மத்திய அரசு வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு அமைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்
பத்திரிகையாளர் ஷகீன் அப்துல்லா இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு
இந்தியா – ஹரியாணா உட்பட சில மாநிலங்களில் சமீபத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் பலர் பேர் உயிரிழந்தனர். குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை கொல்ல வேண்டும் என்றும் அவர்களை சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்க வேண்டும் என்றும் பொதுக் கூட்டங்களில் பேசப்பட்டன. இச்சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி பத்திரிகையாளர் ஷகீன் அப்துல்லா இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்
நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்துள்ளது
வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆராய ஆகஸ்ட் 18-ம் திகதிக்குள் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளார்