வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை, ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகரிடம் (21) கையளித்துள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணை 43 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.