‘பிரிக்ஸ்’ அமைப்பில் அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி, அரபு அமிரகம் இணைவு
பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது தலைமை தாங்கும் தென் ஆப்பிரிக்கா ஜனாதிபதி ராமபோசா
வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் “அர்ஜெண்டினா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம் ஆகிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பின் முழுநேர உறுப்பினர்களாக 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் சேர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளதாக பிரிக்ஸ் அமைப்புக்கு தற்போது தலைமை தாங்கும் தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி ராமபோசா தெரிவித்துள்ளார்
வளரும் நாடுகளின் அமைப்பான ‘பிரிக்ஸ்’ குழுவில் அடுத்த ஆண்டு முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமிரகம், ஈரான் உள்ளிட்ட ஆறு நாடுகள் புதிதாக இணைப்படும் என்று தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா வியாழக்கிழமை தெரிவித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் கடந்த 22-ம் திகதி தொடங்கியது. இந்த அமைப்பில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.