ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று (23) பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக்கட்சியனால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்
அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.
1977 இல் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் தெரிவான விக்ரமசிங்க அவர்கள் 08 வது பாராளுமன்றம் வரை தொடர்ந்து 42 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவு தடவை பிரதமராக பதவி வகித்துள்ளதுடன், கபினட் அமைச்சுப் பதவி, சபை முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
73 வயதான ரணில் விக்ரமசிங்க அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக 09 வது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.