இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அர்ப்பணிப்பிற்கு அமைவாக ‘Diamond Best Foods’ நிறுவனம் அண்மையில் உடுநுவர அபிவிருத்தி அறக்கட்டளையுடன் (Udunuwara Development Trust) இணைந்து 5000 பயனாளிகளிற்கு இலவசமாக பால்மா பக்கெட்டுக்களை வழங்கியது.
கொழும்பு மற்றும் கண்டி பிரதேச பகுதிகளில் இருக்கும் ஒதுக்கப்பட்ட
சமுதாயஙகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5000 பயனாளிகள் இலசவ பால்மாவை
பெற்றுக்கொண்டனர். சுமார் 20 மில்லியனிற்கும் மேலதிகமான பெறுமதியான பால் மா விநியோகிக்கப்படுகின்றது.
2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுததுவதறகாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ சமூக சேவை அமைப்பே உடுநுவர அபிவிருத்தி அறக்கட்டளையாகும். இது பின்தங்கிய சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒத்த எண்ணம் கொண்ட நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் ஒரு தேசிய அரச சார்பற்ற நிறுவனமாகும்.