crossorigin="anonymous">
அறிவியல்

பெண்ணின் மூளையில் 8 செ.மீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிப்பு

இரண்டு மாதங்கள் வரை பெண்ணின் மூளையில் புழு இருந்திருக்கலாம்

உலகில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ஒரு பெண்ணின் மூளையில் 8 செமீ நீளமுள்ள புழு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கான்பெராவில் அறுவை சிகிச்சையின் போது பிரிட்டனில் பிறந்த இந்தப் பெண்ணின் சேதமடைந்த முன் மூளை திசுக்களில் இருந்து “நீண்ட சரம் போன்ற பொருள்” வெளியே இழுக்கப்பட்டது. அது ஒரு புழு.

இந்தச் சிவப்பு நிற ஒட்டுண்ணி இரண்டு மாதங்கள் வரை அந்தப் பெண்ணின் மூளையில் இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறனர்.

விலங்குகளிடமிருந்து மக்களுக்கு பரவும் நோய்களின் ஆபத்து அதிகரித்திருப்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்த பெண் வசித்த இடத்தில் உள்ள ஒரு ஏரிக்கு அருகில் ஒரு வகையான நாட்டுப்புற புல் போன்றவற்றை சேகரிக்கும்போது அந்தப் பெண்ணுக்குள் இந்தப் புழு புகுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இது ஒரு மனிதர்களில் இதுவரை ஆவணப்படுத்தப்படாத ஒரு புதிய வகை தொற்று ஆகும்.

ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி புழு கார்பெட் மலைப்பாம்புகளில் பொதுவாக இருக்கக் கூடியது. இவை ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் விஷமற்ற பாம்புகளாகும்.
(நன்றி: பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 8 + 2 =

Back to top button
error: