நிலவின் தென் துருவத்தில் ஒக்சிஜன் உள்ளிட்ட தாது பொருட்கள்
விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் - 3 தகவல்
இந்தியாவினால் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் – 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கியது
நிலவின் தென் துருவத்தில் வெப்ப நிலை எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தபோது, பிரக்யான் ரோவர் தனக்கு முன்னால் பள்ளம் இருப்பதை உணர்ந்து பாதையை மாற்றி பாதுகாப்பாக பயணித்து வருவதாக இஸ்ரோ கடந்த 27 ஆம் தேதி வெளியிட்டிருந்தது.
ரோவரில் உள்ள Laser- Induced Breakdown Spectroscope (LIBS) என்ற கருவி நிலவின் மேற்பரப்பில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலவின் தென் பகுதியில் கந்தகம், அலுமினியம், கால்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம், மாங்கனீசு ஆகியவை இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
இது தவிர நிலவில் ஒக்சிஜன் இருப்பதாகவும் கண்டறிந்த ரோவர், தற்போது ஹைட்ரஜன் இருக்கிறதா என்று தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.