இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் (Chris Van Hollen) இன்று (30) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
இச்சந்தர்ப்பத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் கலந்து கொண்டனர்.