crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்றம் செப்டெம்பர் 05 முதல் 08ஆம் திகதி வரை கூடும்

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாபிரேரணை விவாதம் செப்டெம்பர் 6,7,8 ஆம் திகதிகளில்

இலங்கை பாராளுமன்றம் இம்மாதம் அடுத்த வாரம் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கூடவிருப்பதுடன், ஒவ்வொரு நாளும் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று  (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

செப்டெம்பர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஆயுள்வேதம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடைபெறவுள்ளது.

அதன் பின்னர் தனிநபர் சட்டமூலங்களான ஸ்ரீ பாலபிவூர்தி வர்தன சமிதிய (கூட்டிணைத்தல்) சட்டமூலம், சமாதி சமூக அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன தொடர்பான இரண்டாவது மதிப்பீடு இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதிக்கப்படவுள்ளது.

செப்டெம்பர் 06ஆம் திகதி புதன்கிழமை மு.ப 10.30 மணிக்கு அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2338/40 ஆம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2341/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி என்பன விவாதம் இன்றி அங்கீகரிக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணி வரை சுகாதார அமைச்சர் கௌரவ கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அமைய விவாதம் இடம்பெறவுள்ளது.

செப்டெம்பர் 07ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு தினங்களும் மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இந்த விவாதத்தைத் தொடர்வதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், 08ஆம் திகதி 5.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 + = 21

Back to top button
error: