இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (02) இலங்கை வருகை தரவுள்ளார்.
இந்திய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.