சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா-எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா – எல்1 விண்கலம் ஸ்இந்திய ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது
சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் இன்று (02) காலை 11:50 மணிக்கு பி.எஸ்.எல்.வி எக்ஸ்.எல் ராக்கெட் மூலமாக ஆதித்யா-எல்1 விண்கலம் இந்திய வரலாற்றில் முதல்முறையாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆதித்யா – எல்1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் , “ஆதித்யா-எல்1 திட்டத்தை மேற்கொள்வதற்காக மிகவும் வித்தியாசமான பணி அணுகுமுறையை செய்த பிஎஸ்எல்விக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இனி, மிஷன் அதன் பயணத்தை எல்1 புள்ளியில் இருந்து தொடங்கும். இது கிட்டத்தட்ட 125 நாட்களைக் கொண்ட மிக நீண்ட பயணம்,” என்றார்.
நிலவின் தென் துருவத்திற்கு அருகே விண்கலம் ஒன்றை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற பெருமையை ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று இந்தியா பெற்றது.