crossorigin="anonymous">
பிராந்தியம்

வட மாகாண தென்னை முக்கோண வலய அங்குரார்ப்பண நிகழ்வு

சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்கள் கெளரவிக்கும் நிகழ்வும்

வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம் (02) இடம்பெற்றது.

நிகழ்வு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டத்தில் இடம்பெற்றது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரின் பங்கேற்புடன் இந் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, தென்னை செய்கையாளர்களுக்கு ஒரு ஏக்கர் தென்னை செய்கைக்கான தென்னைங் கன்றுகளும், உள்ளீடுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்வில் தென்னை செய்கையில் சிறப்பாக மேற்கொண்ட செய்கையாளர்களிற்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் சிறந்த தென்னைச் செய்கையாளர்களுக்கு ரூபா இரண்டு இலட்சம் காசோலைகளும் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், தெங்கு அபிவிருத்தி சபை அதிகாரிகள், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தென்னை உற்பத்தியாளர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 + = 30

Back to top button
error: