அரசாங்கப் பிரதிநிதிகளின் குழு ஒன்று கோயபல்ஸின் ஊடகக் கொள்கையை முன்வைத்து ரணில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் சஜித் போட்டியிட மாட்டார் என்ற போலிச் செய்தியை கட்டமைத்து வருகின்றனர் என்றும்,தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது கோட்டபாயவுடன் உடன்படிக்கை செய்து கொண்டு தன்னை தோற்கடிக்க முயற்சித்தவர்களே இவ்வாறான அறிக்கைகளை கூறிவருகின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலையீட்டில் விவசாத்திற்கு விடியல் வேலைத்திட்டத்தின் கீழ் 40 வருடங்களின் பின்னர் கிரிதிஓயா திட்டத்திற்குச் சொந்தமான தெற்கு கால்வாயை புனரமைக்கும் பணியில் நேற்று (03) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என்பதே இவர்களுக்குக் கூறக்கூடிய பதில் என்றும், தான் மரணத்திற்கு பயப்படும் கோழை அல்ல என்றும் எந்த ஒரு சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ராஜபக்சவுடன் தான் ஒருபோதும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.