வெளிநாடு
ஜப்பான் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை விண்ணில் ஏவியது
ஜப்பான் நிலவை ஆய்வு செய்வதற்கான விண்கலனை இன்று (07) வியாழக்கிழமை அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது .
ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் விண்கலன் நிலவை 120 முதல் 180 நாட்களில் அடையும் என தெரிவித்துள்ளனர்
தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை ஆய்வு செய்வதற்கான SLIM எனும் ஸ்மார்ட் லேண்டர் மற்றும் XRISM எனும் செயற்கைக்கோள் மூலம் பேரண்டம் குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் மூலம் பேரண்டத்தின் தோற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என ஜப்பான் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிலவை நோக்கி விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ஸ்லிம் லேண்டர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தரையிறங்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.