விசேட பயிற்சி பெற்ற புதிய சுகாதார ஊழியர்களுக்கு சான்றிதழ்
கிழக்கு மாகாண சபையினால் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 161 பேருக்கான நான்கு நாள் விசேட பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபகமும், கலை நிகழ்ச்சியும் நேற்று (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம்.வாஜித், திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர், பிரிவுத்தலைவர்கள் உட்பட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.