இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் 4.65 மெக்னிடியூட் அளவில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்பரப்பில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவொரு தாக்கமோ, சுனாமி அபாயமோ ஏற்படவில்லை என பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.