இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இந்திய கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயனை இன்று (11) கேரள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார்
இந்த சந்திப்பில் கேரளாவுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா அபிவிருத்திகளை மேற்கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது
ஆளுநர் செந்தில் தொண்டமான், கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயனை இலங்கைக்கு வருகை தருமாறு விடுத்த அழைப்பை ஏற்று இலங்கை வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்