ரயில் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு தொடர்ந்தும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
அலுவலக ரயில்கள் உட்பட பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து ஜனாதிபதியினால் நேற்று (12) வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது