தாதிப் பயிற்சிக்காக 3500 மாணவர்களை உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களில் உயிரியல் விஞ்ஞானம் அல்லது பௌதீக விஞ்ஞானப் பாடத்தைக் கற்று கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவ மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை 2023.09.15 தொடக்கம் 2023.10.18ஆம் திகதி வரை இத்தாதிப் பயிற்சிக்காக அனுப்பிவைக்கலாம்.
மேலதிக தகவல்களுக்காக 2023.09.15ஆம் திகதி அரசாங்க வர்த்தமான மற்றும் சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.health.gov.lk இற்குள் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ளலாம்.