அமெரிக்காவின் நியூயோர்க்கில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (United Nations General Assembly) 78ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.
“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த மாநாடு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெறவுள்ளது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.