குளியாபிட்டிய மத்திய கல்லூரியின் தரம் 7 மற்றும் 8 மாணவர்கள் சுமார் 700 பேர் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு வருகை (13) தந்தனர்.
பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளிக்கள சேவைப் பிரிவினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராளுமன்ற முறைமை தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்கள் பாராளுமன்றத்தை பார்வையிட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார, படைக்கல சேவிதர் நரேந்திர பர்னாந்து, பிரதிப் படைக்கல சேவிதர் குஷான் சம்பத் மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என். அச்சிந்த எஸ். குரே ஆகியோர் மாணவர்களுடன் கருத்துக்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.