கொரோன தடுப்பூசி போட்டுங்கள், இல்லையென்றால் சிறை – ரோட்ரிகோ டியுடெர்ட்
கொரோன தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். இல்லையென்றால் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிலிப்பைன்ஸில் கரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது. அதன் முயற்சியாக மார்ச் முதல் கரோனா தடுப்பூசிகள் போடுவது தீவிரமடைந்து வருகிறது.
இது குறித்து பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் கூறும்போது,
“கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் நாட்டை விட்டு வெளியேறுங்கள். இந்தியா அல்லது அமெரிக்காவுக்குச் செல்லுங்கள். தடுப்பூசி போட்டுக் கொள்கிறீர்களா அல்லது சிறைக்குச் செல்கிறீர்களா என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.
11 கோடி மக்கள் தொகை கொண்ட பிலிப்பைன்ஸில் இதுவரை 1.95% பேருக்குதான் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண் டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.(இந்து)