விளையாட்டு
2023 ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டி கொழும்பில்
இலங்கை அணி மற்றும் இந்திய அணிகள் ஆடவுள்ளன
2023 ஆசியக்கிண்ண தொடரின் இறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டு மைதானத்தில் இன்று (17) நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் இலங்கை அணி மற்றும் இந்திய அணிகள் ஆடவுள்ளன
சுப்பர் 4 சுற்றில் பங்குபற்றிய முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதன் பின்னர் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் 2 விக்கெட்களால் வெற்றி பெற்ற இலங்கை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2023 ஆம் ஆண்டிற்கான ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி 6 நாடுகளின் பங்கேற்புடன் ஆரம்பமானது.